Home Events பேரிடர் கால நிவாரணநிதி

Events

பேரிடர் கால நிவாரணநிதி

07-06-2021 | General | Venue: Tamilnadu CM Office

Sri Marudhar Kesari Jain Trust, Ambur and Trust run Educational institution's Marudhar Kesari Jain College for women,Vaniyambadi and Bhagwan Mahaveer Dayaniketan Jain School,Vellore have been working together for the last 25 years to provide education for the benefit of economically poor and rural students. The trust initiates various welfare schemes for the people in times of calamity. Corona, a deadly disease that is now threatening the world, has caused various afflictions and fatality. As the state battles the second wave of corona virus, Sri Marudhar Kesari Jain Trust join hands with the Government of Tamil Nadu  to rescue the people from this deadly disease. To alleviate the suffering of the people,  Trust President Sri .M. Vimmalchand Jain,Vice President. Sri. J. Rathanlal Jain,Secretary  Sri.C. Lickmichand Jain and Trustee Sri. K. Rajesh Kumar Jain met the honorable Chief minister Sri.M.K Stalin in person and contributed fund of Rs.25 lakhs to the Chief Minister public relief fund in the hope of lending a hand to government to combat the pandemic.

ஆம்பூர் ஸ்ரீ மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களான மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி மற்றும் பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளி, வேலூர்  இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய ,கிராமப்புற மாணவ மாணவிகளின் நலன் கருதியும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் மிகப்பெரும் கல்வி தொண்டாற்றி வருகிறது. மேலும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகின்றது. அவ்வகையில் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி பெரும் உயிரிழப்பு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடிய நோய் தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்க தமிழக அரசுடன் கைகோர்த்து மக்களின் துயர்துடைக்க அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ .M. விமல்சந்த் ஜெயின் அவர்களும், துணைத் தலைவர். ஸ்ரீ. J.ரத்தன்லால் ஜெயின் அவர்களும், செயலாளர்.ஸ்ரீ. C.லிக்மிசந்த் ஜெயின் அவர்களும், அறங்காவலர் .ஸ்ரீ. K.ராஜேஷ் குமார் ஜெயின் அவர்களும் ரூ. 25 லட்சத்திற்க்கான காசோலையை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

Photo Gallery

 

QUICK LINK

Scholarship

OPAC

    

Contact

Marudhar Kesari Jain College for Women
Vaniyambadi - 635 751, Tamil Nadu, INDIA.

Tel   : +91 4174 225300, 224300,

Mobile : 8825887756

Fax : +91 4174 227027

Email: principal@mkjc.in